நாடு முழுவதும் கொரோனா காரணமாக கடந்த ஆண்டு முழுவதும் தீவிர கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டிருந்தன. அதன்பிறகு கொரோனா பாதிப்பு கணிசமாக குறைந்து வந்த நிலையில் அரசு படிப்படியாக ஊரடங்கு தளர்வுகளை அறிவித்து வருகிறது. இதனிடையே உருமாறிய கொரோனா வகை ஒமைக்ரான் வைரஸ் இந்தியாவில் அதிவேகமாக பரவி வருகிறது. அதனால் அனைத்து மாநில அரசுகளும் பல்வேறு கூடுதல் கட்டுப்பாடுகளை விதித்து வருகின்றன. அதன்படி பெரும்பாலான மாநிலங்களில் இரவு நேர ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு உள்ளது. மக்களுக்கும் கூடுதல் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.
இந்நிலையில் அரியானா மாநிலத்திலும் கூடுதல் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது. அவ்வகையில் ஹரியானா மாநிலத்தில் 50% அடிப்படையில் அனைத்து நிறுவனங்களும் செயல்படுமாறு மினி ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. மேலும் குழந்தைகளுக்கான கொரோனா தடுப்பூசி செலுத்துவது குறித்து நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இந்த நிலையில் தற்போது பள்ளிகள் மற்றும் கல்லூரி மாணவர்களுக்கு வருகின்ற ஜனவரி 12-ஆம் தேதி வரை விடுமுறை அளித்து அம்மாநில அரசு உத்தரவிட்டுள்ளது.