ஒவ்வொரு வருடமும் மத்திய மற்றும் மாநில அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி உயர்வு மற்றும் சம்பள உயர்வு வழங்கப்பட்டு வருகின்றது. ஆனால் கடந்த இரண்டு ஆண்டுகளாக கொரோனா பாதிப்பு காரணமாக அகவிலைப்படி உயர்வு மற்றும் சம்பள உயர்வு ஊழியர்களுக்கு வழங்கப்படாமல் இருந்தது. அதன் பிறகு மத்திய அரசு அகவிலைப்படியை 3 சதவீதமாக உயர்த்தியது. மத்திய அரசு ஊழியர்களுக்கு வழங்கப்படும் அகவிலைப்படியை தொடர்ந்து மாநில அரசுகளும் தங்களது ஊழியர்களுக்கு அகவிலைப்படியை உயர்த்தி வந்தது.
இந்நிலையில் தமிழகத்திலும் அதற்கான அறிவிப்பு தற்போது வெளியாகியுள்ளது. தமிழகத்தில் வருகின்ற பொங்கல் பண்டிகையை முன்னிட்டு முதல்வர் ஸ்டாலின் அகவிலைப்படியை உயர்த்தி வழங்க உத்தரவிட்டுள்ளார். அரசு ஊழியர்களுக்கு பொங்கல் போனஸ் வழங்கப்படும் என்றும் தெரிவித்துள்ளார். இதனால் அரசு ஊழியர்கள் அனைவரும் தங்களது நன்றிகளை முதல்வருக்கு தெரிவித்து வருகின்றனர். இந்த அகவிலைப்படி உயர்வு அரசு ஊழியர்கள் மட்டுமின்றி ஓய்வூதியதாரர்களுக்கு வழங்கப்படும் என்பது குறிப்பிடதக்கது.