Categories
ஆன்மிகம் ராசிபலன் ஜோதிடம்

துலாம் இராசிக்கு…”உழைப்பிற்கு பாராட்டு”… வெற்றி பெறும் நாள்..!!

துலாம் ராசி அன்பர்களே…!! இன்று பிள்ளைகளால் சொந்த-பந்தங்கள் மத்தியில் மதிக்கப்படுவீர்கள். எதிர்பார்த்த உதவிகள் தக்க சமயத்தில் கிடைக்கும். வியாபாரத்தில் அதிரடியான திட்டங்களை தீட்டி மகிழ்வீர்கள். இன்று உத்தியோகத்தில் உங்கள் உழைப்பிற்கு பாராட்டு கிடைக்கும். வெற்றி பெறும் நாளாகவே இன்றைய நாள் இருக்கும். இன்று உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு மறைமுக பிரச்சனைகள் தீரும்.

தொடங்கிய வேலையை திட்டமிட்டபடி செய்ய முடியாமல், இழுபறியான சூழல் கொஞ்சம் இருக்கும். பார்த்துக்கொள்ளுங்கள், நிதானமாக செய்யுங்கள். குடும்பத்தில் இருப்பவர்கள் நீங்கள் கூறுவதை கேட்காமல் தங்கள் விருப்பப்படி எதையுமே செய்வார்கள். இன்று கணவன் மனைவிக்கிடையே சின்னதாக இடைவெளி இருக்கும். கூடுமானவரை எந்த பிரச்சினையையும் பேசி தீர்த்துக் கொள்ளுங்கள். அக்கம்பக்கத்தினர் இடம் கொஞ்சம் அளவாகவே பழகுங்கள்.

இன்று மாணவர்கள் கல்வியில் நல்ல முன்னேற்றம் அடைவார்கள். ஆசிரியர்களின் ஒத்துழைப்பு கிடைக்கும். இன்று முக்கியமான பணியை நீங்கள் மேற்கொள்ளும் பொழுது, நீல நிறத்தில் ஆடை அணிந்து கொண்டு செல்லுங்கள். நீலநிறம் உங்களுக்கு அதிர்ஷ்டத்தை கொடுக்கக் கூடிய அளவில் இருக்கும். அது மட்டுமில்லாமல் இன்று சிவ பெருமான் வழிபாட்டை மேற்கொண்டு காரியத்தைச் செய்யுங்கள். அனைத்துக் காரியமும் நல்லபடியாகவே நடக்கும்.

இன்று உங்களுக்கான அதிர்ஷ்டமான திசை : மேற்கு

அதிஷ்ட எண் : 5 மற்றும் 7

அதிர்ஷ்ட நிறம் :  நீலம் மற்றும் வெள்ளை நிறம்

Categories

Tech |