நடிகர் அஜித் குமார் நடிப்பில் மிகவும் எதிர்பார்ப்பில் இருக்கும் வலிமை படத்தின் ஆல்பம் இன்று வெளியாகப் போவதாக அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. வலிமை படம் 2022ஆம் ஆண்டு பொங்கலுக்கு வருவதாக பட தயாரிப்பு நிறுவனம் முன்பே அறிவித்து இருந்தது. வலிமை படத்திற்காக திரையரங்குகளை எடுக்கும் பணிகள் படக்குழு மூலம் முழுவீச்சில் நடைபெற்று வருகின்றன.
இந்தப் படத்தின் தயாரிப்பாளர் போனி கபூர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில், படத்தின் ரிலீஸ் தேதியாக 2022ஆம் ஆண்டு ஜனவரி 13 என்பதை அதிகாரப்பூர்வமாக அறிவித்திருந்தார். இந்நிலையில் இப்படத்தின் ஆல்பம் இன்று விரைவில் வெளியாக போவதாக அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. மற்ற பாடல்கள் ஜனவரி 13-ஆம் தேதி வெளியாகும் என்று படத்தின் இயக்குனர் பலமுறை கூறி வந்த நிலையில் இந்த படத்தைப் பற்றிய எதிர்பார்ப்பு தற்போது அதிகரித்து வருகிறது.