படம் பார்த்தால் மாடுகள் அதிகம் பால் கொடுப்பதாக ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்த தகவல் ஆச்சிரியத்தை ஏற்படுத்தியுள்ளது.
ரஷ்ய நாட்டின் ,மாஸ்கோவில் இருக்கும் கால்நடை ஆராய்ச்சியாளர்கள் இதற்கான ஆராய்ச்சியை மேற்கொண்டனர் . இதில் மாடுகாளுக்கு பிடித்த விஷயங்களை பார்க்கும் போது அதன் உடலில் மாற்றம் உண்டாவத்தைக் கண்டுபிடித்துள்ளனர் . மேலும் இயற்கைரீதியாக மாடுகள் பால் தருவதற்கும் சம்மந்தம் இருப்பதாகவும் அதன் மூலம் அவற்றின் பால் உற்பத்தி திறன் அதிகமாகிறது என்றும் தெரிவித்துள்ளனர்.
இதற்காக மாடுகளுக்கு விர்சுவல் ரியாலிட்டி பெட்டிகளை முகத்தில் மாட்டியுள்ளனர்.இதில் மாடுகளுக்கு பிடித்த படங்களை காண்பிக்கின்றனர் . மேலும் பல பரிசோதனைகள் நடைபெற இருப்பதாக மாஸ்கோ கால்நடை ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர்