நாடு முழுவதும் கொரோனா காரணமாக கடந்த ஆண்டு முழுவதும் தீவிர கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டிருந்தன. அதன்பிறகு கொரோனா பாதிப்பு கணிசமாக குறைந்து வந்த நிலையில் அரசு படிப்படியாக ஊரடங்கு தளர்வுகளை அறிவித்து வருகிறது. இதனிடையே உருமாறிய கொரோனா வகை ஒமைக்ரான் வைரஸ் இந்தியாவில் அதிவேகமாக பரவி வருகிறது. அதனால் அனைத்து மாநில அரசுகளும் பல்வேறு கூடுதல் கட்டுப்பாடுகளை விதித்து வருகின்றன. அதன்படி பெரும்பாலான மாநிலங்களில் இரவு நேர ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு உள்ளது. மக்களுக்கும் கூடுதல் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.
இந்நிலையில் இந்தியாவில் இதுவரை 1,525 பேருக்கு ஒமிக்ரான் பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது. ஆகவே ஒமிக்ரான் பரவல் மீண்டும் அதிகரிக்க தொடங்கி உள்ளதால், இது தொடர்பாக நாடு முழுவதும் உள்ள சுகாதாரத்துறை அமைச்சர்களுடன் மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் ஆலோசனை நடத்த இருக்கிறார். இதில் ஊரடங்கு கட்டுப்பாடுகளை தீவிரப்படுத்துவது, தடுப்பு செலுத்துவதை அதிகரிப்பது தொடர்பாக ஆலோசிக்கப்பட இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.