Categories
மாநில செய்திகள்

TNPSC தேர்வர்களுக்கு…. வெளியான மிக முக்கிய அறிவிப்பு…. உடனே பாருங்க….!!!!

தமிழகத்தில் அரசுப் பணியிடங்களை நிரப்ப தமிழ்நாடு அரசு பணிகள் தேர்வாணையம் போட்டித் தேர்வுகளை நடத்தி வருகிறது. கொரோனா காரணமாக கடந்த இரண்டு வருடங்களாக போட்டி தேர்வுகள் குறித்த அறிவிப்பு எதுவும் வெளியிடப்படவில்லை. தற்போது டிஎன்பிஎஸ்சி தேர்வாணையம் 2022-ம் ஆண்டுக்கான போட்டித் தேர்வுகள் குறித்த முக்கிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டது. அதில் 22 வகையான தேர்வுகள் நடத்துவதற்கு திட்டமிட்டுள்ளது. குரூப் 2 தேர்வின் 2022ஆம் ஆண்டில் 5 ஆயிரம் காலி இடங்கள் உள்ளதாக தேர்வாணையம் தெரிவித்துள்ளது. இந்த தேர்வு குறித்த அறிவிப்பு பிப்ரவரி மாதம் வெளியாகும். குரூப்-2 தேர்வை எழுத விரும்புவோர் ஏதேனும் ஒரு பட்டப் படிப்பை முடித்திருக்க வேண்டும் என்பது அவசியம்.

தற்போது அரசு போட்டித் தேர்வுகளில் தமிழ்மொழி தேர்வை கட்டாயமாக்கியுள்ளது. இதில் குறைந்தபட்சம் 40 சதவீத மதிப்பெண்கள் எடுப்பது அவசியம். தமிழ்மொழி பாடப்பகுதியை பொறுத்தவரை பத்தாம் வகுப்பு தரத்தில் கேள்விகள் இடம்பெறும் என்று டிஎன்பிஎஸ்சி தேர்வாணையம் அறிவித்துள்ளது. இந்நிலையில் கடந்த டிசம்பர் 30-ஆம் தேதி டிஎன்பிஎஸ்சி இணையதளத்தில் புதிய பாடத்திட்டம் வெளியிடப்பட்டது. அதுமட்டுமல்லாமல் தமிழ்மொழி தகுதித்தேர்வு சேர்க்கப்பட்ட புதிய மாதிரி வினாத்தாள்களும் வெளியிடப்பட்டுள்ளன. குரூப்-2 தேர்வில் திருக்குறள் நீக்கப்பட்டது சர்ச்சைக்கு உள்ளான நிலையில், தமிழ்மொழி தகுதி தேர்வில் தொகுதி 2 மற்றும் 2 ஏ பகுதிகளில் திருக்குறள் தொடர்பான கட்டுரை வரைதல் எனும் பகுதி சேர்க்கப்பட்டு திருத்தப்பட்ட பாடத்திட்டம் தேர்வாணைய இணையதளத்தில் மீண்டும் வெளியிடப்பட்டுள்ளது.

Categories

Tech |