Categories
திருநெல்வேலி மாவட்ட செய்திகள்

உடலை வாங்க மறுத்த உறவினர்கள்…. 2-வது நாளாக நீடிக்கும் போராட்டம்…. நெல்லையில் பரபரப்பு…!!

தொழிலாளியின் உடலை வாங்க மறுத்து 2-வது நாளாக உறவினர்கள் போராட்டத்தில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள வீரவநல்லூர் பகுதியில் கூலி தொழிலாளியான சைலப்பன் என்பவர் வசித்து வந்துள்ளார். இவருக்கு ராஜம்மாள் என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதிகளுக்கு 3 மகள்கள் இருக்கின்றனர். இந்நிலையில் மருதகுளத்திற்கு சென்ற சைலப்பன் அங்கு அறுந்து கிடந்த மின்கம்பியை மிதித்துவிட்டார். இதனால் மின்சாரம் தாக்கி சம்பவ இடத்திலேயே அவர் பரிதாபமாக உயிரிழந்துவிட்டார். இதுகுறித்து தகவல் அறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று சைலப்பனின் சடலத்தை கைப்பற்றி அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்துள்ளனர்.

இந்நிலையில் மின் வாரிய அதிகாரிகளை கண்டித்து சைலப்பனின் உறவினர்கள் நெல்லை-அம்பை பைபாஸ் சாலையில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இதனையடுத்து 2-வது நாளாக சைலப்பனின் சடலத்தை வாங்க மறுத்து உறவினர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இதனை அறிந்த எம்.எல்.ஏ இசக்கி சுப்பையா சைலப்பனின் குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறி 50 ஆயிரம் ரூபாய் நிதி வழங்கியுள்ளார். மேலும் சைலப்பனின் 3 மகள்களின் கல்வி செலவையும் ஏற்பதாக உறுதியளித்துள்ளார்.

இதனை தொடர்ந்து தமிழக மின்சார வாரியம் சார்பில் சைலப்பனின் குடும்பத்தினருக்கு 5 லட்ச ரூபாய் நிதியுதவி மற்றும் வருவாய்துறையினர் சார்பில் ராஜம்மாளுக்கு உதவித்தொகை வழங்குவதற்கான ஆணை கொடுக்கப்பட்டுள்ளது. ஆனாலும் 30 லட்ச ரூபாய் நிவாரண தொகை, குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை போன்றவற்றை வழங்கும் வரை உடலை பெற்று கொள்ள மாட்டோம் என உறவினர்கள் தெரிவித்துள்ளனர்.

Categories

Tech |