Categories
சினிமா தமிழ் சினிமா

“அஜித்தை பின்னுக்கு தள்ளிய விஜய் தேவரகொண்டா”…. இது வேற லெவல் போல இருக்கே…. கெத்து தா….!!!

நடிகர் விஜய் தேவரகொண்டா-வின் ‘லிகர் GLIMPSE’ ஒரே நாளில் அதிக பார்வையாளர்களை பெற்று  சாதனை படைத்துள்ளது 

தெலுங்கு திரையுலகில் முன்னணி நடிகர்களில் ஒருவரான விஜய் தேவரகொண்டா தற்போது லிகர் படத்தில் நடித்து வருகிறார் .தெலுங்கு மற்றும் ஹிந்தியில் உருவாகும் இப்படத்தை பூரி ஜெகன்னாத் இயக்கியுள்ளார். இதில் ஹிந்தி திரையுலகில் பிரபல தயாரிப்பாளரும், இயக்குனருமான கரண் ஜோகர் இப்படத்தை பூரி ஜெகன்னாத் உடன் இணைந்து தயாரித்துள்ளார். MMA FIGHT எனப்படும் குத்துச் சண்டையை மையமாக வைத்து இப்படம் எடுக்கப்பட்டுள்ளது. அனன்யா பாண்டே மற்றும் ரம்யா கிருஷ்ணன் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர் அதோடு இப்படத்தில் பிரபல குத்துச்சண்டை வீரர் மைக் டைசன் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.

இந்நிலையில்  நேற்று முன்தினம் வெளியான இப்படத்தின் GLIMPSE  ரசிகர்களிடையே வரவேற்பை பெற்றுள்ளது .அதோடு இந்திய அளவில் வெளியான ஒரே நாளில் அதிகப் பார்வையாளர்களைப் பெற்ற GLIMPSE என்னும் சாதனையை படைத்துள்ளது .இதற்கு முன்பு வெளியான  RRR படத்தின் GLIMPSE ஒரே நாளில் 7.5 மில்லியன் பார்வையாளர்களை பெற்றது . இதையடுத்து வலிமை படத்தின் GLIMPSE 6.8 மில்லியன் பார்வையாளர்களை பெற்றது. இந்நிலையில் லிகர் GLIMPSE இந்த சாதனையை முடித்துள்ளது. அதோடு வெளியான ஒரே நாளில் 15.9 மில்லியன் பார்வையாளர்களை பெற்று முதலிடத்தில் உள்ளது .இந்தப் படம் இந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Categories

Tech |