குடும்ப தராறில் காவலர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
தர்மபுரி மாவட்டம் அரூர் அடுத்த பாளையம் கிராமத்தை சேர்ந்தவர் குருநாதன். இவருடைய மகன் பழனிசாமி (31). இவர் கிருஷ்ணகிரி மாவட்டம் போச்சம்பள்ளி அருகே சமத்துவபுரத்தில் இயங்கி வரும் தமிழ்நாடு 7-வது மனை சிறப்பு காவலர் பயிற்சி மையத்தில் 2-ஆம் நிலை காவலராக பணிபுரிந்து வந்தார். இதில் பழனிசாமி பாளையம் பகுதியில் வசித்து வந்த திவ்யா என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.
இந்த தம்பதியினருக்கு ரிவான், கவுசிக் என 2 மகன்கள் இருக்கின்றனர். பழனிசாமி தனது குடும்பத்தினருடன் போச்சம்பள்ளி காவலர் பயிற்சி மைய குடியிருப்பில் வசித்து வந்தார். இந்நிலையில், பழனிசாமிக்கும், அவரது மனைவி திவ்யாவுக்கும் இடையே அடிக்கடி குடும்ப தகராறு ஏற்பட்டு வந்துள்ளது.
இதனால் மனமுடைந்த பழனிச்சாமி தனது வீட்டில் உள்ள மின்விசிறியில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து தகவலின் பேரில் காவல்துறையினர் பழனிசாமியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கிரஷ்ணகிரி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இந்த சம்பவம் தொடர்பாக காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.