புத்தாண்டை கொண்டாடும் விதமாக காவல்துறையினர் கேக் வெட்டி தங்களது மகிழ்ச்சியை வெளிப்படுத்தியுள்ளனர்.
கன்னியாகுமரி மாவட்டத்திலுள்ள சுற்றுலா தலங்களுக்கு புத்தாண்டை முன்னிட்டு பொதுமக்கள் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் குளச்சல் சரகத்திற்கு உட்பட்ட நித்திரவிளை காவல்துறையினர் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.
இதனையடுத்து 2022 என்ற வடிவில் உருவாக்கப்பட்ட கேக்கை சரியாக 12 மணிக்கு வெட்டி காவல்துறையினர் புத்தாண்டை வரவேற்றனர். அதன் பின் துணை சூப்பிரண்டு சிந்து அனைவருக்கும் கேக் வழங்கி புத்தாண்டு வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்.