Categories
உலக செய்திகள்

15 வயது சிறுவனை…. இதயத்தை கீறி “துடி துடிக்க”…. லண்டனில் அரங்கேறிய கொடூரம்….!!!!

லண்டனில் 15 வயது சிறுவன் கத்தியால் குத்தி கொல்லப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கடந்த வியாழக்கிழமை அன்று தெற்கு லண்டனில் உள்ள Ashburton என்ற பூங்காவில் 15 வயது சிறுவன் கத்தியால் குத்தப்பட்டு கொலை செய்யப்பட்டுள்ளார். இந்த சம்பவத்தில் பரிதாபமாக உயிரிழந்த அந்த சிறுவனின் உடலை மீட்ட காவல்துறையினர் பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அந்த பரிசோதனையின் முடிவில் சிறுவனின் இதயத்தில் கத்தியால் குத்தப்பட்டதில் ஏற்பட்ட காயத்தால் தான் மரணம் ஏற்பட்டுள்ளதாக மருத்துவர்கள் கூறியிருக்கின்றனர்.

மேலும் இந்த கொலை சம்பவம் தொடர்பில் காவல்துறையினர் சந்தேகத்தின் பேரில் 15 வயது சிறுவன் ஒருவனை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த நிலையில் உயிரிழந்த அந்த சிறுவன் பற்றி துப்பறியும் தலைமை இன்ஸ்பெக்டர் லியோனார்ட் தகவல்கள் சிலவற்றை வெளியிட்டுள்ளார். அந்த வகையில் சிறுவனின் பெயர் Zian Aimable-Lina மற்றும் அவரது புகைப்படம் தற்போது வெளியாகியுள்ளது .

அதோடு மட்டுமில்லாமல் இன்ஸ்பெக்டர் லியோனார்ட் சிறுவனை கொலை செய்த குற்றவாளியை விரைவில் கண்டுபிடித்து தண்டனை வாங்கி கொடுப்பேன் என்று கூறி 24 மணி நேரமும் அயராது உழைத்துக் கொண்டிருக்கிறார். மேலும் இந்த கொலை சம்பவம் தொடர்பில் யாருக்கேனும் தகவல் தெரிந்தால் உடனடியாக கிரைம்ஸ்டாப்பர்களை 0800555111 என்ற எண்ணிற்கு தொடர்பு கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.

Categories

Tech |