மகர ராசி அன்பர்களே…!!! உங்களின் நல்ல அணுகுமுறையை மற்றவர்களும் பின்பற்றக் கூடும். வியாபாரத்தில் இன்று போராடி தான் வியாபாரதில் இலாபம் ஈட்டுவீர்கள். உத்யோகத்தில் சில சூட்சுமங்களைக் கற்றுக் கொள்வீர்கள். திட்டமிட்டு செயல்படுவதன் மூலம் வெற்றி பெறும் நாளாகவே இன்று இருக்கும். இன்று திறமையாக செயல்பட்டு வெற்றி காண்பீர்கள். சமூகத்தில் மதிப்பும் மரியாதையும் பெறுவீர்கள்.
இன்று மாணவர்கள் கல்வியில் சிரமப்பட்டு முன்னேற்றம் காண வேண்டியிருக்கும், அதை மட்டும் பார்த்துக்கொள்ளுங்கள். மன தைரியமும் இன்று கூடும் நாளாக இருக்கும். தொட்டதில் ஓரளவு துளங்கும். நீங்கள் நினைத்த காரியமும் சிறப்பாகவே நடக்கும். கணவன்-மனைவிக்கிடையே ஓரளவு முன்னேற்றம் காணப்படும். அதுபோல மற்றவர்களிடம் பேசும் பொழுது எடுத்தோம், கவுத்தோம் என்று எதையும் பேச வேண்டாம். பொறுமையை கடைபிடியுங்கள். நிதானமாக செயல்படுங்கள்.
இன்று முக்கியமான பணியை நீங்கள் மேற்கொள்ளும் பொழுது, சிவப்பு நிறத்தில் ஆடை அணிந்து கொண்டு செல்லுங்கள். சிவப்பு நிறம் உங்களுக்கு அதிஷ்டத்தை கொடுக்கக் கூடிய அளவில் இருக்கும். அதுமட்டுமில்லாமல் இன்று சிவபெருமான் வழிபாட்டை மேற்கொண்டு காரியத்தைச் செய்யுங்கள். அனைத்துக் காரியமும் நல்லபடியாகவே நடக்கும்.