இந்தியா மற்றும் பாகிஸ்தான் நாடுகளுக்கிடையே அணு ஆயுத தளங்களின் பட்டியல் பரிமாறப்பட்டுள்ளது.
இந்தியா மற்றும் பாகிஸ்தான் நாடுகள் அணு ஆயுதத்தில் பலம் வாய்ந்த நாடுகளாக திகழ்கிறது. இவ்விரு நாடுகளுக்கிடையில் கடந்த 1988 மற்றும் 1991 ஆம் வருடங்களில் ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டது. அதன் அடிப்படையில் கடந்த 30 வருடங்களாக இரண்டு நாடுகளின் ஆயுத தளங்கள் தொடர்பான தகவல்கள் பரிமாற்றம் செய்யப்பட்டு வருகிறது.
அதாவது, அந்தப் பட்டியலில் இருக்கும் தளங்களை இரண்டு நாடுகளுக்கிடையே சண்டை ஏற்படும் போது தாக்கக் கூடாது என்று தெரிவிக்கப்பட்டிருக்கிறது. அதன்படி இரண்டு நாடுகளும் அணு ஆயுதங்கள் நிறுவப்பட்டிருக்கும் தளங்கள் குறித்த பட்டியலை பரிமாறி இருக்கிறது. மேலும் இரண்டு நாட்டு சிறைகளிலும் உள்ள எதிர்நாட்டு கைதிகள் தொடர்பான தகவல்களும் பரிமாறப்பட்டிருக்கிறது.
அதன்படி பாகிஸ்தான் நாட்டின் சிறையில் மீனவர்கள் 677 பேர் மற்றும் பொதுமக்கள் 51 பேர் என்று மொத்தமாக 628 இந்திய மக்கள் இருக்கிறார்கள் என்று பாகிஸ்தானின் பட்டியலில் தெரிவிக்கப்பட்டிருக்கிறது. இதே போன்று இந்தியாவின் சிறையில் மீனவர்கள் 73 பேர் உட்பட சுமார் 355 பாகிஸ்தான் மக்கள் இருப்பதாக இந்தியாவின் பட்டியலில் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.