தமிழகம் முழுவதும் கொரோனா காரணமாக கடந்த ஆண்டு முழுவதும் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. அப்போது பலத்த கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. அதுமட்டுமல்லாமல் தடுப்பூசி போடும் பணியும் தீவிரப்படுத்தப்பட்டது. அதன்பிறகு கொரோனா பாதிப்பு கணிசமாக குறைந்து வந்த நிலையில் அரசு படிப்படியாக ஊரடங்கு தளர்வுகளை அறிவித்து வந்தது.
தற்போது கொரோனா வகை உருமாறிய ஒமைக்ரான் வைரஸ் அதிவேகமாக பரவி வருவதால் தமிழகத்தில் புதிய கட்டுப்பாடுகளுடன் கூடிய ஊரடங்கு ஜனவரி 10-ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. மேலும் அரசு புதிய கட்டுப்பாடுகளையும் விதித்து வருகிறது.
அதன்படி குறிப்பாக திரையரங்கு உள்ளிட்டவைகளுக்கு 50 சதவீதம் மட்டுமே அனுமதி வழங்கப்பட்டுள்ளது. ஆனால் அரசு மற்றும் தனியார் அலுவலகங்கள் தொடர்பாக அறிவிப்பு வெளியாகவில்லை. இந்நிலையில் அரசு அலுவலகங்கள், தனியார் அலுவலகங்கள் 50 சதவீத ஊழியர்களுடன் மட்டுமே இயங்க வேண்டும் என்ற அறிவிப்பு வெளியாகும் என கூறப்படுகிறது.