Categories
திருப்பூர் மாவட்ட செய்திகள்

அருவியில் குளிப்பதற்கு தடை…. ஏமாற்றத்தில் சுற்றுலா பயணிகள்….!!

பஞ்சலிங்க அருவியில் குளிப்பதற்கு சுற்றுலா பயணிகளுக்கு தடை விதிக்கப்பட்டது.

திருப்பூர் மாவட்டத்தில் உள்ள திருமூர்த்தி மலையில் பஞ்சலிங்க அருவி அமைந்துள்ளது. சுற்றியுள்ள வனப் பகுதியிலிருந்து பல்வேறு வழிகளில் ஓடிவரும் தண்ணீர் இந்த பஞ்சலிங்க அருவியில் ஒன்றுசேர்ந்து விழுகிறது. இங்கு ஏராளமான சுற்றுலா பயணிகள் வந்து செல்கின்றனர். இந்நிலையில் புத்தாண்டு தினத்தை முன்னிட்டு ஏராளமான சுற்றுலா பயணிகள் திருமூர்த்திமலைக்கு வந்துள்ளனர்.

ஆனால் திடீரென அருவியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டதால் சுற்றுலா பயணிகள் குளிப்பதற்கு கோவில் நிர்வாகத்தினர் தடை விதித்துள்ளனர். மதியம் 12 மணி அளவில் வெள்ளப்பெருக்கு குறைந்ததால் சுற்றுலா பயணிகளை அனுமதிக்க கோவில் நிர்வாகம் தயாரானது. ஆனால் மீண்டும் மழை பெய்ய ஆரம்பித்ததால் தொடர்ந்து அருவியில் குளிப்பதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. இதனால் பக்தர்களும், சுற்றுலா பயணிகளும் ஏமாற்றத்துடன் மும்மூர்த்திகளை தரிசித்து விட்டு அங்கிருந்து திரும்பி சென்றுள்ளனர்.

Categories

Tech |