Categories
மாநில செய்திகள்

தமிழகத்திற்கு ஒரு நீதி….. குஜராத்திற்கு ஒரு நீதியா?…. கொந்தளித்த சு.வெங்கடேசன் எம்.பி….!!!!

குஜராத்தில் சில மாதங்களுக்கு முன்னர் டவ்தே புயலால் பலத்த மழை பெய்தது. அதனால் இந்தியாவின் மேற்கு கரையோர அனைத்து மாநிலங்களையும் புயல் கடும் சேதத்திற்கு ஆளாக்கியது. இதையடுத்து பிரதமர் மோடி நேரில் சென்று புயல் சேதங்களை பார்வையிட்டு 1,000 கோடி ரூபாய் நிதியும் வழங்கினார்.

இந்நிலையில் இதுபற்றி பேசிய சு.வெங்கடேசன் எம்.பி, குஜராத்தில் புயல் என்றால் நேரில் சென்று 1,000 கோடி ரூபாயை அறிவிக்கிறார் பிரதமர் மோடி. ஆனால் தமிழ்நாடு பெரு வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட போது பிரதமர், உள்துறை அமைச்சரோ எட்டிப்பார்க்காத அது ஏன்? தமிழ்நாட்டுக்கு ஒரு நீதி குஜராத்துக்கு ஒரு நீதியா என்று சு. வெங்கடேசன் எம்.பி. கேள்வி எழுப்பியுள்ளார்.

Categories

Tech |