Categories
திருப்பூர் மாவட்ட செய்திகள்

எங்க கொடுக்குறாங்க….? அதிகரித்த பிளாஸ்டிக் பயன்பாடு…. சமூக ஆர்வலர்களின் கோரிக்கை…!!

பிளாஸ்டிக் பொருட்களின் பயன்பாட்டை குறைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

தமிழகத்தில் ஒரு முறை பயன்படுத்தி தூக்கி எறியும் பிளாஸ்டிக் பொருட்களை பயன்படுத்த தடை விதிக்கப்பட்டுள்ளது. மேலும் தூய்மையான தமிழகத்தை உருவாக்க அரசு பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. இது குறித்து மடத்துக்குளம் பகுதி சமூக ஆர்வலர்கள் கூறும்போது, தமிழக அரசு ஒரு முறை மட்டும் பயன்படுத்த கூடிய பிளாஸ்டிக் பொருட்களுக்கு தடை விதித்துள்ளது.

ஆனால் மடத்துக்குளம், கணியூர், கொழுமம், குமாரலிங்கம் போன்ற பகுதிகளில் பிளாஸ்டிக் பொருட்களின் பயன்பாடு அதிகரித்துள்ளது. எனவே பிளாஸ்டிக் பொருட்களை பயன்படுத்தும் ஹோட்டல்கள், திருமண மண்டபங்கள், வணிக வளாகங்கள் மற்றும் கடைகளை கண்டறிந்து அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டு சம்பந்தப்பட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.

Categories

Tech |