மாவட்ட ஆட்சியர் லலிதா அன்பகம் இல்லத்திலுள்ள குழந்தைகளுடன் புத்தாண்டை கொண்டாடியுள்ளார்.
மயிலாடுதுறை மாவட்டத்தில் 250-க்கும் மேற்பட்ட மாற்றுத்திறனாளிகள் மற்றும் ஆதரவற்ற குழந்தைகள் வாழும் அன்பகம் இல்லம் உள்ளது. இந்நிலையில் மாவட்ட ஆட்சியர் லலிதா தனது மகளுடன் அன்பகம் இல்லத்திற்குச் சென்றுள்ளார். அங்கு மாற்றுத்திறனாளிகள் மற்றும் ஆதரவற்ற குழந்தைகளுக்கு மாவட்ட ஆட்சியர் இனிப்புகள் வழங்கி புத்தாண்டு வாழ்த்து தெரிவித்துள்ளார்.
இதனையடுத்து மாவட்ட ஆட்சியர் அன்பகம் இல்லத்தை பார்வையிட்டு ஆய்வு செய்துள்ளார். பின்னர் அன்பகம் இல்லத்திற்கு வேண்டிய உதவிகளை அரசு சார்பில் பெற்று தருவதாக அதன் நிர்வாகியிடம் மாவட்ட ஆட்சியர் லலிதா தெரிவித்துள்ளார். மேலும் மாற்றுத்திறனாளி குழந்தைகளின் கலை நிகழ்ச்சியில் பங்கேற்ற மாவட்ட ஆட்சியர், அவர்களை பாராட்டியுள்ளார்.