Categories
தேசிய செய்திகள்

சபாஷ்! இப்படி ஒரு குணமா…. 25 ரூபாய் கடனை…. 12 ஆண்டுகளுக்குப் பின்னர் வட்டியுடன் வழங்கிய வாலிபர்….!!!!

ஆந்திரா மாநிலம் காக்கிநாடாவை சேர்ந்தவர் மோகன். இவர் கடந்த 2010-ஆம் ஆண்டு தன்னுடைய மகன் பிரவீனுடன் அங்கு உள்ள கடற்கரைக்கு சென்றுள்ளார். அப்போது கடற்கரையில் வேதசத்தையா என்பவர் சைக்கிளில் வேர்க்கடலை விற்றுக் கொண்டிருந்தார். அவரிடம் சிறுவன் பிரவீன் 25 ரூபாய்க்கு வேர்க்கடலை வாங்கினான். ஆனால் அவனது தந்தை மோகனிடம் பணம் இல்லாததால், வேர்க்கடலை பொட்டலத்தை பிரவீன் திருப்பி வேர்க்கடலை வியாபாரியிடம் கொடுத்துள்ளார். ஆனால் வியாபாரி நாளைக்கு வந்து கொடுங்கள் என்று கூறினார். மறுநாள் மோகன், பிரவீன் இருவரும் கடற்கரைக்கு சென்றபோது, வேதசத்தையா அங்கு வரவில்லை.

அதன் பின்னர் தனது குடும்பத்துடன் அமெரிக்கா சென்றுவிட்டார் மோகன். இந்த நிலையில் விடுமுறைக்கு காக்கிநாடாவுக்கு வந்த பிரவீன், வேதசத்தையாவிடம் வாங்கிய 25 ரூபாய் கடனை திருப்பி கொடுக்க விரும்பியுள்ளார். இதற்காக காக்கிநாடா கடற்கரைக்கு சென்று கடலை வியாபாரியை தேடினார். ஆனால் கண்டுபிடிக்க இயலவில்லை. இதுபற்றி தனது உறவினரும், காக்கிநாடா எம்எல்ஏவுமான, சந்திரசேகரிடம் கூறியுள்ளார்.

மேலும் வேதசத்தையாவுடன் பிரவீன் எடுத்த புகைப்படத்தையும் அனுப்பினான். அந்த படத்தை சமூக வலைதளங்களில் பதிவிட்டு, வேதசத்தையாவை தேடினார். அதைப் பார்த்த சிலர் வேதசத்தையா இறந்துவிட்டதாக தகவல் தெரிவித்துள்ளனர். இதையடுத்து வேதசத்தையா மனைவியை எம்எல்ஏவின் வீட்டிற்கு வரவழைத்து அவரிடம் பிரவீன் தான் 12 ஆண்டுகளுக்கு முன்பு வாங்கிய 25 ரூபாய்க்கு வட்டியுடன் சேர்த்து 23,000 திருப்பிக் கொடுத்தார். இந்த சம்பவம் பலரையும் ஆச்சரியப்படுத்தியுள்ளது. கடன் தொகை மிக சிறியது என்றாலும், அதை பல ஆண்டுகளுக்குப்பிறகு நினைவில் வைத்து திருப்பி கொடுத்த பிரவீனை ஏராளமானோர் சமூக வலைதளங்களில் பாராட்டி வருகின்றனர்.

Categories

Tech |