Categories
மாநில செய்திகள்

தமிழக முழுவதும் பள்ளி மாணவர்களுக்கு…. வெளியான ஹேப்பி நியூஸ்….!!!!

இந்தியாவில் 15 -18 வயது வரையுள்ள சிறார்களுக்கு ‘கோவாக்சின்’ தடுப்பூசி செலுத்த மத்திய அரசு அனுமதி வழங்கியுள்ளது. அதன்படி இன்று முதல் அவர்களுக்கு கொரோனா தடுப்பூசி செலுத்த இருக்கிறது. மத்திய அரசின் கோவின் இணையதளத்தில், அதற்கான முன்பதிவு சமீபத்தில் தொடங்கியது. தமிழகத்தில் சிறார்களுக்கு தடுப்பூசி செலுத்தும் திட்டத்தை சென்னை போரூர் அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில், முதல்வர் முக.ஸ்டாலின் இன்று தொடங்கி வைக்க இருக்கிறார். அதற்குரிய வழிகாட்டு நெறிமுறைகளை பொது சுகாதாரத்துறை இயக்குனர் செல்வ விநாயகம் வெளியிட்டுள்ளார்.

அதில் தெரிவிக்கப்பட்டு இருபதாவது, கடந்த 2007ஆம் ஆண்டு மற்றும் அதற்கு முந்தைய ஆண்டுகளில் பிறந்த அனைவரும் தடுப்பூசி செலுத்த தகுதியானவர்கள். ஆகவே சிறார்கள் தடுப்பூசி செலுத்தி கொள்ள கோவின் இணையத்தில் முன்பதிவு செய்து கொள்ளலாம். மேலும் மையங்களுக்கு சென்றும் நேரடியாக தடுப்பூசி செலுத்தி கொள்ளலாம். இவர்கள் அனைவருக்கும் கோவாக்சின் தடுப்பூசி மட்டுமே செலுத்தப்படும். தடுப்பூசி செலுத்திக்கொள்ள 10ஆம் வகுப்பு தேர்வு பதிவு எண், ஆதார் எண், பள்ளி அடையாள அட்டை போன்றவற்றில் ஏதேனும் ஒன்றை காண்பிக்க வேண்டும். மாவட்ட கல்வித் துறை அதிகாரிகளுடன் சேர்ந்து தடுப்பூசி செலுத்தும் திட்டத்தை செயல்படுத்த வேண்டும்.

எனவே அனைத்து வட்டார மருத்துவ அலுவலர்களும், 3ஆம் தேதி முதல் 8ஆம் தேதிக்குள் பள்ளி மாணவர்கள் அனைவருக்கும் தடுப்பூசி செலுத்தியுள்ளதை உறுதி செய்ய வேண்டும். தமிழகத்தில் 33.46 லட்சம் சிறார்களில், 25 லட்சத்துக்கும் மேற்பட்டோர் பள்ளிகளில் பயின்று வருகின்றனர். ஆகவே பள்ளிகள் அனைத்திலும் தனியாக இடம் ஒதுக்கி, சிறப்பு முகாம்கள் அமைக்க, மாவட்ட சுகாதார அதிகாரிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. இதனால் பள்ளிகளில் ஒரு ஆசிரியரை ஒருங்கிணைப்பு அதிகாரியாக நியமனம் செய்ய வேண்டும். அனைத்து பள்ளி நிர்வாகங்களும் தடுப்பூசி செலுத்த தகுதியுள்ள மாணவர்களை அடையாளம் கண்டு பட்டியல் தயாரிக்க வேண்டும்.

அவ்வாறு தடுப்பூசி செலுத்திக்கொள்ள இணையதளத்தில் பதிவு செய்வது கட்டாயமில்லை. நேரடியாகவும் தடுப்பூசி செலுத்தி கொள்ளலாம். மாணவர்கள் எண்ணிக்கைக்கு ஏற்றவாறு கோவாக்சின் தடுப்பூசி கையிருப்பில் வைத்து கொள்ள வேண்டும். பள்ளிகளில் படிக்கும் 25 லட்சம் மாணவர்களுக்கு தடுப்பூசி போட்டு விட்டால், மீதமுள்ள சிறார்களை எளிதாக கண்டறிந்து, தடுப்பூசி சசெலுத்தி விட முடியும். இதனிடையில் பள்ளி செல்லாத குழந்தைகளுக்கு சமூக நலத் துறையுடன் இணைந்து, தடுப்பூசி செலுத்த நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். அதன்படி 33.46 லட்சம் சிறார்களுக்கு 100 % தடுப்பூசி செலுத்தும் இலக்கை விரைவில் அடைய வேண்டும்” என்று அதில் கூறப்பட்டுள்ளது.

Categories

Tech |