Categories
சினிமா

என்னது….! இவருக்கு கொரோனாவா…. அத அவங்களே சொல்லிருக்காங்க பா…..  இன்ஸ்டாவில் வெளியிட்ட பதிவு…!!!

பிரபல இந்தி நடிகை ஒருவர், தனக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டிருப்பதாக இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தெரிவித்திருக்கிறார்.

மராட்டியத்தை சேர்ந்த முர்னல் தாகூர் என்ற பிரபல இந்தி நடிகைக்கு கொரோனா தொற்று ஏற்பட்டிருப்பதாக இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தெரிவித்திருக்கிறார். இவர் பல மராத்திய மொழி திரைப்படங்களில் நடித்திருக்கிறார். இந்நிலையில் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அவர் தெரிவித்திருப்பதாவது, “எனக்கு கொரோனா தொற்று ஏற்பட்டிருக்கிறது.

லேசான அறிகுறிகள் தான் ஏற்பட்டது. நான் நன்றாக இருக்கிறேன். தற்போது என்னை தனிமைப் படுத்திக்கொண்டிருக்கிறேன். மருத்துவர்களின் அறிவுறுத்தலை பின்பற்றி வருகிறேன். என்னுடன் தொடர்பில் இருந்தவர்கள் பரிசோதனை மேற்கொள்ளுங்கள். எல்லோரும் கவனமுடன் இருங்கள்” என்று குறிப்பிட்டிருக்கிறார்.

Categories

Tech |