வருண் மற்றும் அக்ஷரா புதிய படத்தில் நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
சின்னத்திரையில் நிறைய பிரபலமான நிகழ்ச்சிகள் ஒளிபரப்பாகி வருகின்றன. அந்த வகையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் முக்கியமான நிகழ்ச்சி ”பிக்பாஸ்”. இந்த நிகழ்ச்சியின் 5 வது சீசன் தற்போது வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது. இதனையடுத்து, இந்த நிகழ்ச்சியில் இருந்து கடைசியாக வருண் மற்றும் அக்ஷரா எலிமினேஷன் ஆனார்கள்.
மேலும், எலிமினேஷன் ஆனபிறகு இவர்கள் இருவரும் ஒன்றாக எடுத்த புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகியது. இந்நிலையில், இவர்கள் இருவரும் ஒன்றாக புதிய படத்தில் நடிக்க ஒப்பந்தமாகி இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. விரைவில் இது குறித்த அறிவிப்பு வெளியாகும் என்றும் கூறப்படுகிறது.