Categories
தேசிய செய்திகள்

மத்திய அரசு ஊழியர்கள்…. அகவிலைப்படி 34%ஆக உயர்வு?…. செம ஹேப்பி நியூஸ்….!!!!

ஜனவரி 2022 இல் அகவிலைப்படி (DA) எவ்வளவு அதிகரிக்கப்படும் என்பது முடிவு செய்யப்படவில்லை என்றாலும், AICPI குறியீட்டின் தரவுகளின்படி 3 % DA அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஆகவே அகவிலைப்படி அதிகரிப்பால் மீண்டும் ஊழியர்களின் சம்பளம் உயரும் என்று கூறப்படுகிறது. 2022 ஜனவரியில் அகவிலைப்படியை 3 சதவீதம் அதிகரிக்கலாம் என்று நிபுணர்கள் கருத்து தெரிவிக்கின்றனர். இதன் காரணமாகி மொத்த DA சதவீதம் 31 % இருந்து 34 % இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இதில் AICPI தரவுகளின்படி செப்டம்பர் 2021 வரையில் அகவிலைப்படி (DA) 32.81 சதவீதமாக இருந்தது. இந்த வருட அக்டோபர் மாதத்தில் பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அமைச்சரவையானது, மத்திய அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி மற்றும் ஓய்வூதியதாரர்களுக்கு அகவிலை நிவாரணம் (டிஆர்) கூடுதல் தவணையாக வழங்க ஒப்புதல் வழங்கியுள்ளது. 1/7/2021ஆம் ஆண்டு விலைவாசி உயர்வை ஈடுசெய்ய அடிப்படை ஊதியம் /ஓய்வூதியத்தின் தற்போதைய விகிதமான 28 சதவீதத்தை விட 3% அதிகரிப்பை குறிக்கிறது.

இதனிடையில் 7வது மத்திய ஊதியக் குழுவின் பரிந்துரைகளின் அடிப்படையில் இந்த உயர்வு இருக்கிறது. அகவிலைப்படி மற்றும் அகவிலைப்படியின் நிவாரணம் போன்ற இரண்டு காரணத்தினால் 9,488.70 கோடி ரூபாய் மத்திய அரசுக்கு செலவாகும். இதன் மூலமாக 47.14 லட்சம் மத்திய அரசு ஊழியர்களும், 68.62 லட்சம் ஓய்வூதியதாரர்களும் பயனடைவார்கள். கொரோனா தொற்றுநோயால் ஏற்பட்ட சூழ்நிலையைக் கருத்தில் கொண்டு, மத்திய அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி (DA) மற்றும் ஓய்வூதியம் பெறுபவர்களுக்கு அகவிலை நிவாரணம் (DR) 3 கூடுதல் தவணைகள் முடக்கப்பட்டு இருந்தது குறிப்பிடத்தக்கது.

Categories

Tech |