கனமழையை பொருட்படுத்தாமல் பொதுமக்கள் படகு சவாரி செய்துள்ளனர்.
கடலூர் மாவட்டத்தில் உள்ள பிச்சாவரத்தில் சுற்றுலா மையம் அமைந்திருக்கிறது. இந்நிலையில் இந்த சுற்றுலா மையமானது 5000 ஏக்கர் நிலப்பரப்பில் பரந்து விரிந்த நிலையில் இருக்கிறது. அதன்பின் இதில் அழகு கொஞ்சும் சதுப்பு நில காடுகளில் அதிகமான கிளை காடுகளும் இருக்கின்றது. இதனையடுத்து காடுகளில் உள்ள சுரபுன்னை மரங்கள் மருத்துவ குணம் கொண்டதாக கூறப்படுகிறது. பின்னர் இந்தக் காடுகளைப் பார்த்து ரசிப்பதற்காக நாள்தோறும் உள்ளூர் மட்டுமின்றி வெளி மாவட்டத்தில் வசிக்கும் பயணிகள் வந்து செல்கின்றனர்.
இதனை தொடர்ந்து புத்தாண்டு தினத்தை முன்னிட்டு அதிகமான சுற்றுலாப் பயணிகள் இப்பகுதிக்கு அலைமோதி வந்துள்ளன. இருப்பினும் தற்போது பெய்து கொண்டிருக்கும் மழையை பொருட்படுத்தாமல் சில சுற்றுலா பயணிகள் பாதுகாப்பு உபகரணங்களை அணிந்து மழையில் நனைந்தவாறு உற்சாகமாக படகு சவாரி செய்து சதுப்பு நில காடுகள் பார்த்து ரசித்துள்ளனர். மேலும் இதில் பலர் தங்களது செல்போனில் செல்பி எடுத்துள்ளனர்.