பிரபல நடிகை காஜல் அகர்வால் கர்ப்பமாக இருப்பதாக அவரின் கணவர் இன்ஸ்டாகிராமில் கூறியிருக்கிறார்.
தமிழ் திரையுலகில் கடந்த 2006 ஆம் வருடத்தில் பொம்மலாட்டம் என்ற திரைப்படத்தில் அறிமுகமான நடிகை காஜல் அகர்வால், அதனையடுத்து, அஜித், விஜய் மற்றும் சூர்யா என்று முன்னணி நடிகர்களுக்கு ஜோடியாக நடித்து ரசிகர்களிடையே பிரபலமானார். தமிழ் திரையுலகில் முன்னணி நடிகையாக வலம் வந்த அவர் கடந்த 2020 ஆம் வருடம் அக்டோபர் மாதத்தில், தொழிலதிபரான கௌதம் என்பவரை திருமணம் செய்தார்.
அதன்பின்பும், தொடர்ந்து படங்களில் நடித்து வந்தார். எனினும் சமீபத்தில் அவர் ஒப்பந்தம் செய்த படங்களிலிருந்து விலகினார். எனவே, அவர் கர்ப்பமாக இருக்கிறார் என்று பேசப்பட்டது. ஆனால், அவர் அந்த தகவலை உறுதிப்படுத்தவில்லை. இந்நிலையில், காஜல் அகர்வாலின் கணவரான கௌதம், தன் மனைவி காஜல்அகர்வால் கர்ப்பமாக இருப்பதாக கூறியிருக்கிறார்.
அவர் தன் இன்ஸ்டாகிராம் பக்கத்தில், காஜல் அகர்வாலின் புகைப்படத்தை வெளியிட்டு, அவர் கர்ப்பமாக உள்ளார் என்பதை உறுதிப்படுத்தியிருக்கிறார். எனவே ரசிகர்கள் மற்றும் திரையுலகப் பிரபலங்கள் அவருக்கு வாழ்த்துக்கள் கூறி வருகிறார்கள்.