Categories
மாநில செய்திகள்

தமிழக கூட்டுறவு வங்கிகளில்….. அனைவருக்கும் நகைக்கடன் தள்ளுபடி …. அரசுக்கு வலுக்கும் கோரிக்கை ….!!!!

தமிழகத்தில் கூட்டுறவு வங்கிகள் தொடக்க வேளாண் கூட்டுறவு கடன் சங்கங்கள் மூலமாக தங்க நகைகளுக்கு கடன் வழங்கப்பட்டு வருகின்றது. சட்டப்பேரவைத் தேர்தலுக்கு முன்பாக திமுக அரசு நகை கடன்களை தள்ளுபடி செய்வதாக வாக்குறுதி அளித்திருந்தது. அதன்படி 5 சவரன் வரை உள்ள நகை கடன்களை தமிழக அரசு சமீபத்தில் தள்ளுபடி செய்து உத்தரவு பிறப்பித்தது. அதன்படி கடன்களை தள்ளுபடி செய்வதற்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டு வந்தன. இதில் ஒரே குடும்பத்தை சேர்ந்தவர்கள் வெவ்வேறு வங்கிகளில் நகை கடன் பெற்றுள்ளனர். சிலர் வங்கி அதிகாரிகள் துணையுடன் போலி நகைகளை அடகு வைத்தது தெரியவந்தது. இதனால் கூட்டுறவு சங்க நகைகளை ஆய்வு செய்யுமாறும், அந்த பணியை நவம்பர் 30-ஆம் தேதிக்குள் முடிக்கும்படியும், கூட்டுறவு துறைக்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருந்தது.

ஆனால் அவகாசம் முடிந்தும் ஆய்வு முடியவில்லை. தங்க நகைகளை திரும்ப வழங்கக்கோரி கூட்டுறவு வங்கிகளுக்கு நகைகளை அடமானம் வைத்தவர்கள் சென்றபடி உள்ளனர். இந்நிலையில் நகைகளை திரும்ப கொடுப்பதற்கு பட்டியல் தயாரிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து முறைகேட்டில் ஈடுபட்டவர்கள் மீது சட்டரீதியான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. நகை கடன் பெற்ற 48,84,726 பேரில் 35,37,693 பேர் தகுதியற்றோர் பட்டியலில் உள்ளனர். அவர்களுக்கு நகை கடன் தள்ளுபடி கிடையாது என்றும் தெரிவிக்கப்பட்டது. அதன்படி வெளியிட்ட பட்டியலில் 2001-ஆம் ஆண்டு பயிர் கடன் தள்ளுபடி பெற்றவர்களுக்கு கூட்டுறவு சங்கங்களில் பெற்ற நகை கடன் தள்ளுபடி கிடையாது. கூட்டுறவு வங்கியில் பெற்ற கடனை முழுமையாக செலுத்தியவர்களுக்கு நகை கடன் தள்ளுபடி கிடையாது என்றும், பல்வேறு நிபந்தனைகள் விதிக்கப்பட்டுள்ளது.

அரசின் இந்த அறிவிப்புக்கு பலரும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். தேர்தல் வாக்குறுதியில் உள்ளபடி அனைவரது நகையையும் கடன் தள்ளுபடி செய்ய வேண்டும் என்று வலியுறுத்தி வருகின்றனர். அதனைத் தொடர்ந்து முக்குலத்துப்  புலிகள் கட்சியினர், 70% பேருக்கு மட்டும் நகை கடன் தள்ளுபடி செய்வது ஏமாற்றமளிக்கிறது. அதனால் கூட்டுறவு வங்கிகளில் 5 சவரன் அளவிலான நகை கடன் பெற்ற அனைவரது கடன்களையும் தள்ளுபடி செய்ய வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனர். மேலும் பொங்கல் பரிசு தொகையாக 2,500 ரூபாய் வழங்க வேண்டும் என்று அந்தக் கட்சியின் தலைவர் தமிழக அரசை வலியுறுத்தியுள்ளார்.

Categories

Tech |