Categories
தேசிய செய்திகள்

திருப்பதி பக்தர்களுக்கு ஷாக் நியூஸ்…. மிரண்டுபோன தேவஸ்தானம்….!!!!

ஆந்திர மாநிலம் திருப்பதி ஏழுமலையான் கோவிலில் கடந்த 2020-ஆம் வருடம் மார்ச் முதல் கொரோனா பரவலை தடுக்கும் வகையில் பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. குறிப்பிட்ட நாட்கள் பக்தர்களுக்கு முற்றிலும் தடை விதிக்கப்பட்டது. இதனையடுத்து நிலைமை சீரானதும் முகக்கவசம், சானிடைசர், போதிய சரீர இடைவெளி, தடுப்பூசி சான்றிதழ், கொரோனா நெகடிவ் சான்றிதழ் உள்ளிட்ட கட்டுப்பாடுகள் அமலுக்கு வந்தன. 2020-ஐ காட்டிலும் கடந்த 2021-ஆம் ஆண்டு நிலைமை சற்று முன்னேற்றம் அடைந்தது. ஆனாலும் 2-வது அலையின் தாக்கத்தை தடுக்க முடியவில்லை.

இந்த நிலையில் 2021-ஆம் ஆண்டு ஜனவரி 1 முதல் டிசம்பர் 31 வரை நடந்த முக்கியமான 5 விஷயங்களை தேவஸ்தானம் தனது அதிகாரப்பூர்வ இணையதளத்தில் வெளியிட்டுள்ளது. அதில் கடந்த வருடம் 1.04 கோடி பக்தர்கள் நடைபாதை வழியாக வந்து ஏழுமலையானை தரிசனம் செய்துள்ளனர். 50 ரூபாய் லட்டு மட்டும் 5.96 கோடி என்ற எண்ணிக்கையில் விற்பனையாகி இருக்கிறது.
48.75 லட்சம் நபர்கள் மொட்டை அடித்துக்கொண்டனர். இதையடுத்து உண்டியல் வசூல் 833 கோடி ரூபாய் ஆகும். 1.37 கோடி முறை அன்னதான பிரசாதம் வழங்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் 2022ஆம் வருடத்துக்கான ஏழுமலையான் காலண்டரை தேவஸ்தானத் தலைவர் ஒய்.வி.சுப்பா ரெட்டி மற்றும் செயல் அதிகாரி கே.எஸ்.ஜவகர் ரெட்டி போன்றோர் அறிமுகம் செய்து வைத்தனர். அதாவது ஆறு பக்கங்கள் உடைய காலண்டரில் 3டியில் வெங்கடாஜலபதி படங்கள் இடம்பெற்றுள்ளது. மேலும் கல்யாண மண்டபங்களில் விற்பனைக்கு கிடைக்ககூடிய பொருட்கள், நாடு முழுவதிலுமுள்ள தேவஸ்தான தகவல் மையங்கள் போன்றவற்றின் தகவல்கள் காலண்டரில் இடம்பெற்றுள்ளன.

இதை திருமலா, திருப்பதி, விஜயவாடா, ஹைதராபாத், சென்னை, பெங்களூருவிலுள்ள பக்தர்கள் வாங்கிக் கொள்ளும் அடிப்படையில் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. மேலும் ஆன்லைன் அமேசான் இந்தியா, இந்தியா போஸ்ட் போன்றவற்றின் மூலமாக முன்பதிவு செய்து வாங்கிக் கொள்ளவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் தனியார் விற்பனையாளர்கள் சிலர் அமேசான் இணையதளம் மூலமாக ஏழுமலையான் காலண்டரை அதிக விலைக்கு விற்பதாக புகார்கள் வந்துள்ளன. இதனை அறிந்த திருப்பதி தேவஸ்தானம் உடனடியாக அமேசானை தொடர்புக்கொண்டு சம்பந்தப்பட்டவர்கள் மீது நடவடிக்கை மேற்கொள்ள வேண்டி கேட்டுக் கொண்டு உள்ளது. மேலும் பக்தர்கள் நேரடியாக அமேசான் தளத்தின் மூலமாக வாங்கிக் கொள்ளவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

Categories

Tech |