Categories
மாநில செய்திகள்

#BREAKING: பொங்கல் பரிசு தொகுப்பு…. தமிழக அரசு அதிரடி உத்தரவு….!!!!!

தமிழகத்தில் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு அனைத்து ரேஷன் அட்டைதாரர்களுக்கும் 21 பொருள்கள் அடங்கிய பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கப்பட உள்ளது. இந்த பொங்கல் பரிசு வழங்கும் திட்டத்தை முதல்வர் ஸ்டாலின் நாளை மறுநாள் தொடங்கி வைக்க இருக்கிறார். அதேசமயம் ரேஷன் கடைகளுக்கு மக்கள் கூட்டமாக வருவதை தடுக்க எந்த நேரத்தில் எந்த தேதியில் வரவேண்டும் என்ற விவரம் அடங்கிய டோக்கன்கள் வீடு வீடாக சென்று விநியோகம் செய்யப்பட்டு வருகின்றன.

இந்நிலையில் ரேஷன் கடைகளில் வினியோகிக்கப்படும் பொங்கல் தொகுப்பின் தரம் குறித்து ஆய்வு செய்ய அதிகாரிகளை நியமித்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. தகுதியுள்ள அனைத்து ரேஷன் அட்டைதாரர்களுக்கு ம் பொங்கல் பரிசு தொகுப்பு சென்றடைவதை உறுதி செய்ய வேண்டும் என்று அரசு தெரிவித்துள்ளது.

Categories

Tech |