ரம்மி விளையாட்டிற்கு அடிமையாகி மன உளைச்சலில் வாலிபர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள கூவாகம்நத்தம் கிராமத்தில் குமாரவேலு என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் கேபிள் டிவி ஆபரேட்டராக வேலை பார்த்து வந்துள்ளார். இந்நிலையில் இவருக்கு ஆன்லைனில் ரம்மி விளையாடும் பழக்கம் இருந்து வந்துள்ளது. அதன்பின் இதற்கு குமாரவேலு அடிமையாகி இருந்த நிலையில் பணத்தையும் அதிக அளவில் இழந்து வந்திருக்கிறார். இதனையடுத்து ரம்மி சூது விளையாட்டில் இருந்து மீள முடியாத அவர் உறவினர்கள் மற்றும் பலரிடம் கடனாகப் பணம் வாங்கி விளையாடி வந்திருக்கிறார்.
இதில் இவர் 4 லட்ச ரூபாய் வரைக்கும் பணத்தை இழந்துள்ளார். பின்னர் நகையை அடகு வைத்து அதன் மூலமாக 12,000 ரூபாய் பெற்று அதை ரம்மி விளையாடி அவர் முழுவதையும் இறந்துள்ளார். இதனால் மன உளைச்சலில் இருந்த குமாரவேலு திடீரென மரத்தில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். இது பற்றி தகவல் அறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று குமாரவேலுவின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். மேலும் இது குறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.