Categories
அரசியல் மாநில செய்திகள்

“அடப்பாவிங்களா!”…. சுக்கு நூறா நொறுக்கிட்டீங்களே…. கொந்தளித்த வானதி சீனிவாசன்….!!!!

கோயம்புத்தூரில் கிருஷ்ணர் சிலை ஒன்றை மர்ம நபர்கள் சிலர் அடித்து நொறுக்கியுள்ளதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

கோயம்புத்தூரில் உள்ள மேட்டுப்பாளையம் சாலை அருகே அமைந்துள்ள பாரதி பூங்கா வளாகத்தில் கிருஷ்ணர் சிலை ஒன்று நிறுவப்பட்டுள்ளது. அந்த சிலையை அடையாளம் தெரியாத மர்ம நபர்கள் சிலர் அடித்து நொறுக்கியுள்ளனர். இதனால் கிருஷ்ணரின் முழங்காலுக்கு மேல் உள்ள பாகங்கள் உடைக்கப்பட்டு கீழே கிடந்ததாக ஊழியர்கள் தகவல் தெரிவித்துள்ளனர். இந்த சம்பவம் குறித்து தகவலறிந்து வந்த இந்து முன்னணி அமைப்பினர் மற்றும் பாஜக கட்சியினர் பூங்காவில் திரளாக குவிந்தனர்.

அதனைத் தொடர்ந்து பாஜக தேசிய மகளிரணி தலைவர் வானதி சீனிவாசன் அந்த சிலையை பார்வையிட்டுள்ளார். மேலும் மாநகர காவல் ஆணையர் அலுவலகத்தில் இந்த விவகாரம் தொடர்பில் பாஜக கட்சியினர் புகார் மனு ஒன்றை அளித்துள்ளனர். இதற்கிடையே இந்த சம்பவம் தொடர்பில் அறிக்கை ஒன்றை வெளியிட்டிருந்த வானதி சீனிவாசன், பல வருடங்களாக அந்த கிருஷ்ணர் சிலை பாரம்பரியமாக போற்றப்பட்டு வருகிறது.

அதிலும் குறிப்பாக ஆன்மீக சிந்தனை கொண்டவர்கள் அந்த கிருஷ்ணரை வணங்கிவிட்டு காலையில் நடைப்பயிற்சிக்கு செல்வதை வழக்கமாக வைத்து வருகிறார்கள். ஆனால் அடையாளம் தெரியாத நபர்கள் சிலர் அங்குள்ள கிருஷ்ணர் சிலையை அடித்து நொறுக்கியுள்ளனர். இந்த செயலானது ஒரு மதத்தை இழிவுப்படுத்தும் விதமாக உள்ளது என்று கூறி வன்மையாக கண்டித்துள்ளார்.

மேலும் இந்த சம்பவத்தில் தொடர்புடைய நபர்களை காவல்துறையினர் கைது செய்ய வேண்டும் என்றும் பாஜக கட்சி சார்பில் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது. அதேபோல் இந்து முன்னணி சார்பில் சிலை உடைப்பை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என்று இந்து முன்னணி மாவட்ட செய்தி தொடர்பாளர் தனபால் கூறியுள்ளார்.

Categories

Tech |