பிரதமர் மோடி இன்று உத்திரப்பிரதேச மாநிலம் மீரட்டில் மேஜர் தியான் சந்த் விளையாட்டு பல்கலைக்கழகத்திற்கு அடிக்கல் நாட்டினார். இந்த நிகழ்ச்சியில் பிரதமர் மோடி பேசுகையில், இந்த பல்கலைக்கழகம் 700 கோடி ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்ட உள்ளது. விளையாட்டுக் கருவிகள் தயாரிப்பில் இந்தியா தன்னிறைவு பெற வேண்டும் என்று கூறியுள்ளார்.
சுமார் 700 கோடி ரூபாய் மதிப்பீட்டில் விளையாட்டு பல்கலைக்கழகம் நிறுவப்படுகிறது. செயற்கை ஹாக்கி மைதானம், கால்பந்து மைதானம், கூடைப்பந்து, கைப்பந்து கபடி மைதானம், டென்னிஸ் மைதானம், உடற்பயிற்சிக்கூடம், நீச்சல்குளம் உள்ளிட்டவை இங்கு அமைகின்றன. மேலும் துப்பாக்கி சுடுதல் ஸ்குவாஷ், ஜிம்னாஸ்டிக்ஸ், பளுதூக்குதல் வில்வித்தை உள்ளிட்ட விளையாட்டுகளுக்கு பயிற்சி பெறும் வசதிகளும் இங்கு இருக்கும் என பிரதமர் அலுவலகம் தெரிவித்துள்ளது.