தமிழகத்தில் அரசு ஊழியர்களுக்கு அரசு சார்பில் மருத்துவ காப்பீடு வழங்கப்படுகிறது. காப்பீட்டு திட்டத்தில் இணைந்தர்களுக்கு அரசு அங்கீகரிக்கப்பட்ட மருத்துவமனைகளில் மூலம் 203 வகையான சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. சமீபத்தில் புதிய காப்பீட்டு திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டது. இதில் யுனைடெட் இந்தியா இன்சூரன்ஸ் நிறுவனத்துடன் தமிழக ஒப்பந்தம் செய்துள்ளது. இதையடுத்து மாதம் ஊதியத்தில் இருந்து பிடித்தம் செய்யப்பட்ட தொகையை கடந்த ஜூலை மாதத்திலிருந்து முதல் ரூ.300 ஆக உயர்த்தப்பட்டுள்ளது. இதானல் ஓர் ஆண்டிற்கு ரூ.5 லட்சம் வரை காப்பீடு தொகை மூலம் சிகிச்சை பெற்றுக் கொள்ளலாம். தற்போது அரசு ஊழியர்களுக்கு அமலில் உள்ள மருத்துவ காப்பீடு திட்டம் 2025 வரை நீடிக்கப்பட்டுள்ளது.
அதனை தொடர்ந்து புதிய மருத்துவ காப்பீட்டு ஒப்பந்த நிறுவனம் சிகிச்சை பெறுவோருக்கு மிக குறைவான தொகை வழங்குகிறது. மேலும் அந்த தொகையும் உரிய நேரத்தில் வழங்குவதில்லை. இதனால் அரசு ஊழியர்கள் பல்வேறு சிக்கல்களை மேற்கொள்கின்றனர் என்று புகார்கள் எழுந்துள்ளது. இந்நிலையில் புதிய மருத்துவ காப்பீடு திட்டத்தில் மருத்துவ செலவு தொகை தேவைப்படுவோர் மருத்துவ நலப்பணிகள் இணை இயக்குனரிடம் விண்ணப்பிக்க வேண்டும் என்று அரசு தெரிவித்துள்ளது. அதன்படி ஜனவரி 1-ஆம் தேதி முதல் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வரும் அரசு ஊழியர்கள் மருத்துவ செலவு தொகை பெறுவதற்காக விண்ணப்பங்களை தங்களின் அலுவலகம் மூலம் திண்டுக்கல் மருத்துவ நலப்பணிகள் இணை இயக்குனரிடம் உரிய ஆவணங்களை விண்ணப்பத்துடன் இணைத்து சமர்ப்பிக்க வேண்டும் என்று மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.