Categories
திருப்பத்தூர் மாவட்ட செய்திகள்

இருசக்கர வாகனம்-லாரி மோதல்…. வாலிபருக்கு நடந்த விபரீதம்…. சோகத்தில் குடும்பத்தினர்….!!

இருசக்கர வாகனம் மீது மினிலாரி மோதி வாலிபர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள மேல்பள்ளிப்பட்டு பகுதியில் சக்திவேல் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் சவுண்ட் சர்வீஸ் கடையில் பணிபுரிந்து வந்துள்ளார். இந்நிலையில் வாடகைக்கு கொடுத்திருந்த பந்தல் மற்றும் நாற்காலிகள் உள்ளிட்ட இரும்பு சாமான்களை ஏற்றி வருமாறு மினிலாரி வைத்திருக்கும் பாலாஜி என்பவர் ராஜாவை அனுப்பி வைத்துள்ளார். அதன்பின் பாலாஜியுடன் பணியாட்களான சங்கர் மற்றும் சக்திவேல் ஆகிய இருவரும் பொருட்களை ஏற்றி வருவதற்காக சென்றுள்ளனர்.

அப்போது செட்டிவட்டம் அருகில் வந்து கொண்டிருக்கும் போது இருசக்கர வாகனத்தில் வந்த ஆனந்தன் மற்றும் பிரபாகரன் ஆகியோர் மீது மினிலாரி மோதியது. இதனையடுத்து வேன் மோதிய வேகத்தில் நடுரோட்டில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இதில் மினி லாரியின் பின்னால் இருந்த சக்திவேல் பலத்த காயமடைந்து சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்துள்ளார். இது பற்றி தகவல் அறிந்த காவல்துறை சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று சக்திவேலுவின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். மேலும் இது குறித்து வழக்குபதிவு செய்த காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Categories

Tech |