Categories
தேசிய செய்திகள்

மீண்டும் ஒரு அதிர்ச்சி மரணம்…. பள்ளி மாணவி எடுத்த விபரீத முடிவு…. பரபரப்பு சம்பவம்…..!!!!!

சமீபகாலமாக மாணவ-மாணவிகள் தற்கொலை செய்யும் சம்பவம் அதிகரித்துக்கொண்டே இருக்கிறது. அந்த வகையில் 9-ஆம் வகுப்பு மாணவி ஒருவர் தேர்வு எழுத பயந்து போய், தீக்குளித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அரங்கேறியுள்ளது. இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. புதுச்சேரி முதலியார்பேட்டை விடுதலை நகரில் வசித்து வருபவர் முருகன். இவர் ஒரு பெயிண்டர். இவரது மகள் ரேஷ்மா. அந்தப் பகுதியில் உள்ள ஒரு அரசு பள்ளியில் 9-ஆம் வகுப்பு படித்து வந்தார்.

கடந்த 28-ஆம் தேதி அன்று செந்தில் பணி முடித்து விட்டு வீடு திரும்பிய போது, அவரது மகள் ரேஷ்மா உடல் முழுவதும் தீயிட்டு கொண்டு வீட்டு மாடியில் இருந்து அலறியடித்துக்கொண்டு ஓடி வந்துள்ளார். இதைப்பார்த்த செந்தில் அதிர்ச்சி அடைந்தார். அதன் பின்னர் தன் மகளை மீட்டு சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு கொண்டு சென்றார். கடந்த 3 நாட்களாக சிகிச்சை பெற்று வந்த ரேஷ்மா, சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார்.

இதுபற்றி மாணவியின் தந்தை செந்தில் முருகன் அளித்த புகாரின் அடிப்படையில் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வந்தனர். அந்த விசாரணையில் பள்ளியில் நடைபெற்று வரும் தேர்வு எழுதுவதற்கு பயந்துகொண்டு மாணவி மண்ணெண்ணெய் ஊற்றி தீயிட்டு தற்கொலை செய்து கொண்டது தெரியவந்தது. இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பையும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

Categories

Tech |