செய்தியாளர்களிடம் பேசிய தேமுதிக பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த், எல்லாரையும் கேப்டன் வந்து புத்தாண்டு தினத்தன்று பார்ப்பது வழக்கம் அதேபோல் இன்றைக்கு ஒட்டுமொத்த தொண்டர்கள் விருப்பத்திற்காக வந்தாங்கள், எல்லாரையும் பார்த்தார்கள், அத்தனை பேருக்கும் கேப்டனை பார்த்ததில் மகிழ்ச்சி.
வரபோகும் 2022 ல நடக்கப்போகின்ற தேர்தலை நாம் சந்திக்கப் போகிறோம், அது குறித்து கேப்டன் கொடுத்த அறிக்கைகளை ஏற்கனவே பார்த்தோம். வருகின்ற உள்ளாட்சி தேர்தல் அதாவது நகர்புற உள்ளாட்சி தேர்தலில் தேசிய முற்போக்கு திராவிட கழகம் போட்டியிடும் என்பதை சொல்லி இருக்கிறோம்.
அதற்குப் பிறகு ஒவ்வொரு நகர்வாக அனைத்து மக்கள் பிரச்சினைகளையும் நாங்கள் களத்தில் இறங்கி தேசிய முற்போக்கு திராவிட கழகம் எல்ல இடத்திலும் நாங்கள் பணிகளை செய்வோம் என்பதை தெரிவித்துக் கொள்கிறோம்.
திருவொற்றியூரில் கட்டிடம் இடிந்ததை நேரடியாக நான் பார்க்க சென்றபோது பிரஸ் கிட்ட தெளிவாக நான் சொன்னேன், திமுகவை கேட்டால் அதிமுகவை பலி போடுகிறார்கள், அதிமுகவை கேட்டால் திமுகவை பழி கூறுகின்றார்கள். கடந்த 50, 60 ஆண்டு காலமாக தமிழகத்தை ஆட்சி செய்தது இந்த இரண்டு கட்சிகள் தான். தமிழ்நாட்டில் நடக்கும் அனைத்து அவலங்களுக்கும் இந்த இரண்டு கட்சிகளும் பொறுப்பு. இதை யாரும் இன்னொருத்தர் மேல் சாக்கு போட்டு இவர்கள் தப்பித்துக் கொள்ள முடியாது என தெரிவித்தார்.