Categories
நாமக்கல் மாவட்ட செய்திகள்

ஊழியர் கொடூர கொலை…. விசாரணையில் வெளிவந்த உண்மை…. 5 பேர் அதிரடி கைது….!!

கள்ளக்காதலால் மின்வாரிய ஊழியரை கொடூரமாக கொலை செய்த 5 பேரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர்.

நாமக்கல் மாவட்டம் எருமப்பட்டியை அடுத்துள்ள அலங்காநத்தம் பாலப்பட்டி கிராமத்தில் செந்தில்குமார் என்பவர் வசித்து வந்துள்ளார். மின்சார வாரியத்தில் ஒப்பந்த தொழிலாளியாக வேலை பார்த்து வரும் இவருக்கு லதா என்ற மனைவியும், 2 பிள்ளைகளும் உள்ளனர். இந்நிலையில் சம்பவத்தன்று எருமப்பட்டி அருகே புதுக்கோட்டை இருந்து தூசூர் செல்லும் சாலையில் உள்ள வாய்க்கால் அருகே செந்தில்குமார் கழுத்து மற்றும் மர்ம உறுப்புகள் அறுக்கப்பட்ட நிலையிலும், உடல் பாதி எரிந்த நிலையிலும் கொடூரமாக கொலை செய்யப்பட்டு கிடந்துள்ளார்.

இதனை பார்த்த அப்பகுதியினர் அதிர்ச்சி அடைந்து உடனடியாக எருமப்பட்டி காவல்நிலையத்திற்கு தகவல் தெரிவித்துள்ளனர். தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற காவல்துறையினர் செந்தில் குமாரின் உடலை மீட்டு உடற்கூறு ஆய்விற்காக நாமக்கல் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து நடத்திய விசாரணையில் செந்தில்குமாருக்கும் அதே பகுதியை சேர்ந்த ஒரு பெண்ணுக்கும் இடையே கள்ளத்தொடர்பு இருப்பது தெரியவந்துள்ளது.

இதனையடுத்து காவல்துறையினர் நடத்திய தீவிர விசாரணையில் இந்த வழக்கு தொடர்பாக செந்தில்குமாருடன் பணியாற்றிய பீமநாயக்கனூரை சேர்ந்த நடராஜ் மற்றும் அவரது நண்பர்களான கண்ணன், சம்பாமேடு பகுதியை சேர்ந்த பரசுராமன், புதுக்கோட்டையை சேர்ந்த ராஜா, ராசாபுதூரை சேர்ந்த ராஜா ஆகிய 5 பேரை கைது செய்து கிடுக்கிப்பிடி விசாரணை நடத்தியுள்ளனர். அந்த விசாரணையில் பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகியுள்ளது.

இந்நிலையில் கொலை செய்யப்பட்ட செந்தில்குமார் மற்றும் நடராஜன் இருவரும் மின்வாரியத்தில் ஒப்பந்த தொழிலாளர்களாக வேலை பார்த்து வந்துள்ளனர். அப்போது நடராஜனின் மனைவி ஜெயாவிற்கும், செந்தில் குமாருக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த பழக்கம் நாளடைவில் கள்ளக்காதலாக மாறியுள்ளது. இதனை அறிந்த நடராஜன் பலமுறை செந்தில்குமாரை கண்டித்துள்ளார். ஆனால் செந்தில்குமார் மற்றும் ஜெயா தொடர்பை கைவிடாமல் பேசி கொண்டிருந்துள்ளனர்.

இதனால் நடராஜனுக்கும் ஜெயாவிற்கும் தகராறு ஏற்பட்டு கடந்த 4 மாதங்களுக்கு முன்பு ஜெயா அவரது பெற்றோர் வீட்டிற்கு சென்றுள்ளார். இதில் ஆத்திரமடைந்த நடராஜன் செந்தில் குமாரை தீர்த்து கட்ட முடிவெடுத்துள்ளார். எனவே தனது நண்பர்களுடன் இணைந்து செந்தில்குமாரை இரும்பு கம்பியால் தாக்கி, மர்ம உறுப்பை துண்டித்து, பெட்ரோல் ஊற்றி எரித்து விட்டு அங்கிருந்து தப்பியோடியது விசாரணையில் தெரியவந்துள்ளது. இதனையடுத்து எருமபட்டி காவல்துறையினர் கைது செய்யப்பட்ட 5 பேரையும் சிறையில் அடைத்து தொடர்ந்து விசாரித்து வருகின்றனர்.

Categories

Tech |