பாஸ்கான் நிறுவன ஊழியர்கள் போராட்டம் தொடர்பாக சர்ச்சைக்குரிய வகையில் வீடியோ வெளியிட்ட சாட்டை துரைமுருகன் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். பல்வேறு வழக்குகளில் கைது செய்யப்பட்டு சிறையில் இருந்த சாட்டை துரைமுருகன், கடந்த மாதம் யூடியூப் தளத்தில் வீடியோ ஒன்றை வெளியிட்டார். அதில் பாஸ்கான் நிறுவனத்தில் பணியாற்றும் 9 பெண்கள் உயிரிழந்துவிட்டதாக பேசியிருந்தார்.
அந்த வீடியோ ஊழியர்களின் போராட்டம் தீவிரம் அடைந்ததற்கு காரணம். பொய்யான தகவலை பரப்பி கலவரத்தை தூண்டினார் என்று கூறி காவல்துறையினர் அவரை கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர். இந்நிலையில் சிறையில் உள்ள யூடியூபர் சாட்டை துரைமுருகன் மீது குண்டர் தடுப்பு சட்டம் பாய்ந்துள்ளது. பொய்யான வதந்தியை பரப்பிய புகாரில் திருவள்ளூர் ஆட்சியர் உத்தரவின் பேரில் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.