இலங்கையில் பச்சைமிளகாய் அதிக விலைக்கு விற்பனை செய்யப்பட்டு வருவதால் இல்லத்தரசிகள் அதிர்ச்சியில் உள்ளனர்.
அன்றாட வாழ்வில் தேவைப்படும் அத்தியாவசிய பொருட்களின் விலை கூட நாளைக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகிறது. அந்த வகையில் இலங்கையில் உள்ள கம்பஹா என்ற பகுதியிலும், அதனை சுற்றியுள்ள சில பகுதிகளிலும் பச்சைமிளகாய் ஒரு கிலோ கிராம் ரூ.1000 முதல் 1500 வரை விற்பனை செய்யப்பட்டு வருகிறதாம். இதனால் இல்லத்தரசிகள் பெரும் அதிர்ச்சியில் உள்ளனர்.