Categories
உலக செய்திகள்

ஜனவரி 9 முதல்…. பயணிகளுக்கு…. ஏர் கனடா வெளியிட்ட முக்கிய அறிவிப்பு….!!!!

ஏர் கனடா விமான நிறுவனம் பயணிகளுக்கு முக்கிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது.

கனடாவின் ரொறன்ரோவில் இருந்து Bermuda-வுக்கு நேரடியாக செல்லும் பயணிகள் விமானமானது ஜனவரி 9-ஆம் தேதி முதல் இயங்காது என்று ஏர் கனடா விமான நிறுவனம் முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அதிகரித்து வரும் கொரோனா பரவலை கருத்தில் கொண்டு இந்த திடீர் முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக ஏர் கனடா செய்தி தொடர்பாளர் தகவல் தெரிவித்துள்ளார்.

மேலும் இதுதொடர்பில் அரசாங்கம் விதித்துள்ள கட்டுப்பாடுகள் மற்றும் தொற்று நோய்களின் வீரியம், தனிமைப்படுத்துதல் உள்ளிட்டவற்றை கவனித்தபடியே ஏர் கனடா விமான நிறுவனம் மெல்ல மெல்ல தனது பணியை தொடரும் என்று தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் பாதிக்கப்படும் வாடிக்கையாளர்களுக்கு பணத்தை திரும்ப பெறுவதற்கும், மாற்று வழிகள் குறித்து ஆலோசனை கேட்பதற்கும் ஏர் கனடாவை தொடர்பு கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.

Categories

Tech |