20 டன் பாரம் ஏற்றி வந்த கண்டெய்னர் லாரி சாலையில் கவிழ்ந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை துறைமுகத்தில் இருந்து திருவொற்றியூரில் இருக்கும் சரக்கு பெட்டக நிலையத்திற்கு 20 டன் எடையுள்ள எந்திரங்களை ஏற்றிக்கொண்டு கண்டெய்னர் லாரி புறப்பட்டுள்ளது. இந்நிலையில் துறைமுக வாயில் வழியாக வந்த கண்டெய்னர் லாரி திடீரென சாலையில் கவிழ்ந்துவிட்டது.
இது குறித்து தகவல் அறிந்த காசிமேடு போக்குவரத்து புலனாய்வு பிரிவு காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று கவிழ்ந்து கிடந்த கண்டெய்னர் லாரியை மீட்டனர். இந்த விபத்தில் படுகாயம் அடைந்த கண்டெய்னர் லாரி ஓட்டுநரான ரவிச்சந்திரன் என்பவரை மீட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்துள்ளனர். இதுகுறித்து வழக்கு பதிவு செய்த காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.