இந்தியாவில் கொரோனா பரவல் காரணமாக கடந்த ஆண்டு முழுவதும் முழு ஊரடங்கு அமலில் இருந்தது. அதன் பிறகு கணிசமாக குறைந்து வந்த நிலையில் ஊரடங்கு தளர்வு அறிவிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் தென்னாப்பிரிக்காவில் கொரோனா வைரஸ் ஒமைக்ரான் என்ற புதிய வைரசாக உருமாறி உலக நாடுகளை அதிர வைத்துள்ளது.
அதன்படி இந்தியாவில் அதிகமாக பரவி வருகிறது. இதனால் அனைத்து மாநிலங்களிலும் பாதுகாப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கை தீவிரப்படுத்த வேண்டும் என்று மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது. இந்நிலையில் இந்தியாவில் ஒமைக்ரான் பாதிப்பு எண்ணிக்கை 1,700 ஆக அதிகரித்துள்ளது. நேற்று 1,525 ஆக இருந்த ஒமைக்ரான் பாதிப்பு ஒரே நாளில் 1,700 ஆக அதிகரித்துள்ளது.