தமிழகத்தில் டெல்டா மற்றும் ஒமிக்ரான் கொரோனா பரவலை கட்டுப்படுத்த மாநில அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அதன்படி தடுப்பூசி போடும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. அதுமட்டுமல்லாமல் முகக்கவசம் அணிந்து மக்கள் அனைவரும் சமூக இடைவெளியை முறையாக பின்பற்ற வேண்டும் என்று அரசு வலியுறுத்தியுள்ளது. மேலும் புதிய கட்டுப்பாடுகளுடன் கூடிய ஊரடங்கு ஜனவரி 10-ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் இன்று செய்தியாளர்களை சந்தித்து பேசிய சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன், முகக்கவசம் போடாதவர்களிடம் அபராதம் வசூல் செய்ய தயக்கம் காட்டத் தேவையில்லை. முகக்கவசம் போடாதவர்களிடம் விழிப்புணர்வை ஏற்படுத்தவே அபராதம் வசூல் என்பதை தெளிவுபடுத்த வேண்டும் என்று அவர் தெரிவித்துள்ளார்.