நாடு முழுவதும் கொரோனா பரவல் அதிவேகமாக பரவி வருகிறது. அதனால் 18 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகிறது. இந்நிலையில் உருமாறி ஒமிக்ரான் வைரஸ் அதிவேகமாக பரவி வருவதால் 15 முதல் 18 வயதுடைய சிறார்கள் அனைவருக்கும் இன்று முதல் தடுப்பூசி செலுத்தும் பணியை சென்னை சைதாப்பேட்டையில் உள்ள பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் முதல்வர் முக.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.
இதனைதொடர்ந்து பேசிய முதல்வர், சென்னையில் நாளுக்கு நாள் கொரோனா தொற்று பாதிப்பு அதிகரித்து கொண்டே செல்கிறது. ஆகவே அனைவரும் பாதுகாப்புடன் இருப்பது தான் எனக்கு மகிழ்ச்சியாக இருக்கும் என்று தெரிவித்துள்ளார்.