நாடு முழுவதும் கொரோனா பரவல் அதிவேகமாக பரவி வருகிறது. அதனால் 18 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகிறது. இந்நிலையில் உருமாறி ஒமிக்ரான் வைரஸ் அதிவேகமாக பரவி வருவதால் 15 முதல் 18 வயதுடைய சிறார்கள் அனைவருக்கும் இன்று முதல் தடுப்பூசி செலுத்தும் பணியை சென்னை சைதாப்பேட்டையில் உள்ள பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் முதல்வர் முக.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.
இதனைதொடர்ந்து பேசிய முதல்வர், தடுப்பூசிகள் நோய் எதிர்ப்பு சக்தியை தொடர்ந்து அளித்து வருகிறது. மேலும் தடுப்பூசி செலுத்திக் கொண்டால் இறப்பு விகிதம் குறைவாக இருக்கும் என்று கூறியுள்ளார்.