Categories
அரசியல்

‘பொற்கால ஆட்சியில் பொல்லாத அமைச்சர்’…. அமைச்சர் வீட்டு முன் கோஷம்…. ஸ்டாலினுக்கு புது சிக்கல்….!!!!

பொற்கால ஆட்சியின் பொல்லாத அமைச்சர் என்று செந்தில் பாலாஜியின் வீட்டு முன்பு போராட்டம் நடந்து வருகிறது.

தற்போதைய திமுக ஆட்சியின் மதுவிலக்கு துறை அமைச்சரான செந்தில் பாலாஜியின் வீட்டை முற்றுகையிட்டு இன்று காலையில் பார் உரிமையாளர்கள் போராட்டம் நடத்தி வருகிறார்கள். அதாவது டாஸ்மாக் பார் டெண்டருக்கு விடப்படுவதில் முறைகேடு நடந்திருக்கிறது என்று அவர்கள் கூறியுள்ளனர்.

மேலும், போராட்டக்காரர்கள், “பொற்கால ஆட்சியினுடைய பொல்லாத அமைச்சர்” என்று செந்தில் பாலாஜிக்கு எதிரான கோஷங்களை எழுப்புகிறார்கள். மேலும், “முதல்வரை நம்பி தான் வாக்களித்தோம், மக்களின் வயிற்றில் அடிக்காதீர்கள்” என்று கூறினர். தமிழ்நாட்டில் இருக்கும் 41 டாஸ்மாக் மாவட்டங்களில் 4500 க்கும் அதிகமான பார்கள் இயங்கி வருகிறது.

இதில் 2600 பார்களில் தின்பண்டங்கள் விற்பனை செய்யும் ஏலம் நடக்கிறது. இதனால் அரசாங்கத்திற்கு 200 கோடி ரூபாய் வருமானம் கிடைக்கும். ஆனால் இதில் பாதி பார்களில் தான் டெண்டர் நடக்கிறது. யாரேனும் டெண்டர் போடுவதற்கு வந்தால், அவர்களை காவல்துறையினர் விடுவதில்லை என்று கூறுகிறார்கள்.

மேலும் தமிழ்நாட்டில் மூன்று முக்கிய புள்ளிகள் தான் அனைத்து பார்களிலும் ஏலம் விடும் பொறுப்பை எடுத்திருக்கிறார்கள். அவர்களுக்கு விருப்பமான நபர்களுக்கு தான் நேரில் விண்ணப்பங்கள் தரப்படுகிறது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் அவர்களாகவே ஆட்கள் மூலம் இணையதளங்களில் விண்ணப்பங்கள் போட்டிருக்கிறார்கள்.

உரிய முறையில் டெண்டர் விடப்பட்டால், அரசாங்கத்திற்கு 200 கோடி ரூபாய்க்கு மேலாக வருமானம் கிடைக்கும். இவ்வாறு முறைகேடான முறையில் டெண்டர் விடப்படுகிறது. எனவே இதில் பாதி வருவாய் கூட அரசாங்கத்திற்கு கிடைக்காது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் அமைச்சர் செந்தில் பாலாஜியின் வீடு முற்றுகையிடப்பட்டு போராட்டம் நடத்தப்பட்டு வருவது முதலமைச்சர் மு.க ஸ்டாலினுக்கு புதிய பிரச்சனையை உண்டாக்கி இருக்கிறது.

பொதுக்கூட்டம் சமீபத்தில் நடந்தபோது, அதில் முதலமைச்சர் மு.க ஸ்டாலின் செந்தில்பாலாஜியின் நடவடிக்கைகள் குறித்து அதிகம் பாராட்டிப் பேசியிருக்கிறார். செந்தில்பாலாஜி கோவை மாவட்டத்தை திமுக கோட்டையாக மாற்றுவார் என்று கருதப்படும் நிலையில், அவர் பொறுப்பிலிருக்கும் துறை முறைகேடாக நடந்து வருவதாக புகார்கள் எழுந்து இருக்கிறது. இது முக ஸ்டாலினுக்கு பெரும் பிரச்சனையை ஏற்படுத்தும் என்று கூறப்பட்டுள்ளது.

Categories

Tech |