குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் மக்கள்நீதிமய்யம் சார்பில் வழக்கு தொடரப்பட்டுள்ளது.
பாராளுமன்ற குளிர்கால கூட்டத்தொடரில் பல்வேறு முக்கிய மசோதாக்கள் நிறைவேற்றப்பட்டன. அதில் முக்கியமான ஒன்று குடியுரிமை மசோதா திருத்த சட்டம். இதற்கு எதிராக பல்வேறு மாநிலங்களில் தொடர் போராட்டம் நடைபெற்று வந்தது. தமிழகத்திலும் கூட திமுக உள்ளிட்ட எதிர்க்கட்சிகளின் சார்பில் போராட்டங்கள் இச்சட்டத்திற்கு எதிராக வலுப்பெற்றன.
மேலும் இந்த குடியுரிமை திருத்த மசோதாவை எதிர்த்து காங்கிரஸ் முஸ்லிம் லீக் உள்ளிட்ட கட்சிகள் உச்சநீதிமன்றத்தில் மனுக்கள் தாக்கல் செய்தனர். இவர்களை தொடர்ந்து தற்போது மக்கள் நீதி மையம் சார்பில் இந்த மசோதாவிற்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
இன்னும் சில மணி நேரங்களில் இந்த வழக்கை அவசர வழக்காக விசாரிக்க வேண்டும் என்ற கோரிக்கையை மக்கள் நீதி மய்யம் சார்பில் உச்சநீதிமன்றத்தில் வைக்க பட உள்ளது. காங்கிரஸ் முஸ்லிம் லீக் உள்ளிட்ட கட்சிகளை தொடர்ந்து மக்கள் நீதி மய்யம் கட்சியும் குடியுரிமை திருத்த மசோதாவிற்கு எதிராக வழக்குத் தொடர்ந்து இருப்பதால் இந்த 3 வழக்குகளையும் ஒரே வழக்காக உச்ச நீதிமன்றம் கருதி விசாரிக்கலாம் என்று எண்ணப்படுகிறது.
ஏனெனில் இந்த 3 வழக்குகளின் நோக்கம் ஒன்றே ஒன்றுதான் மதரீதியாக குடியுரிமை வழங்குவது என்பது இந்திய அரசியலமைப்பு சட்டத்திற்கு எதிரானது என்பதே. ஆகவே இந்த வழக்குகளை அவசர வழக்காக எண்ணி உச்சநீதிமன்றம் விசாரிக்குமா என்பது அனைவரது எதிர்பார்ப்பாக உள்ளது.