நாளொன்றுக்கு 50 பேர் என்ற கணக்கில் மாதம் சுமார் 1,518 வெளிநாட்டவர்களை நாடு கடத்தப்படுவதாக குவைத் அரசாங்கம் தகவல் தெரிவித்துள்ளது.
குவைத்தின் உள்துறை அமைச்சகம் நாளொன்றுக்கு 50 பேர் என்ற கணக்கில் மாதம் சுமார் 1,518 வெளிநாட்டவர்களை நாடு கடத்துவதாக தகவல் தெரிவித்துள்ளது.
மேலும் குவைத்தின் உள்துறை அமைச்சகம் கடந்தாண்டில் மட்டும் சுமார் 18,221 வெளிநாட்டவர்களை நாடு கடத்தியுள்ளதாகவும் தகவல் வெளியிட்டுள்ளது. அதோடு மட்டுமின்றி வெளிநாட்டவர்களை குவைத் நாடு கடத்துவதற்கான முக்கிய காரணத்தையும் வெளியிட்டுள்ளது.
அதாவது குவைத்தில் சட்டவிரோதமாக முடிந்துபோன இருப்பிட சான்றிதழை பயன்படுத்தி தங்கியிருந்தவர்கள் தான் நாடு கடத்தப்பட்டுள்ளார்கள் என்று தெரிவித்துள்ளது.
மேலும் போராட்டத்தில் ஈடுபட்ட வெளிநாட்டவர்கள் மற்றும் ஊரடங்கு விதியை மீறியவர்கள் உட்பட பல முக்கிய குற்றச் செயல்களில் ஈடுபட்டவர்கள் தான் நாடு கடத்தப்பட்டுள்ளார்கள் என்றும் குவைத் அரசாங்கம் தெரிவித்துள்ளது.