Categories
உலக செய்திகள்

OMICRON : “நேரடியாக நுரையீரலை தாக்குமா?”…. உண்மையை உடைத்த விஞ்ஞானிகள்….!!!!

‘ஒமிக்ரான்’ வைரஸ் நேரடியாக நுரையீரலை தாக்குமா ? என்பது குறித்த ஆய்வில் ஆச்சரியமான தகவல்கள் சில வெளியாகியுள்ளது.

சீனாவின் வூஹான் மாகாணத்தில் தோன்றிய கொரோனா வைரஸ் தற்போது வரை உலக நாடுகளை உலுக்கி வருகிறது. இந்நிலையில் தென்ஆப்பிரிக்காவில் முதன்முறையாக உருமாறிய புதிய வகை ‘ஒமிக்ரான்’ வைரஸ் கண்டறியப்பட்டது. இந்த வைரஸ் குறைந்த நாட்களிலேயே நூற்றுக்கும் மேற்பட்ட நாடுகளில் பரவி மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

எனவே ஆய்வாளர்கள் ஒமிக்ரான் குறித்த ஆய்வில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். அந்த வகையில் ஏற்கனவே டெல்டா போன்ற வைரஸ்களை ஒப்பிடும்போது ஒமிக்ரான் வைரஸ் குறைவான பாதிப்பையே ஏற்படுத்தும் என்று விஞ்ஞானிகள் தரப்பில் சொல்லப்பட்டது. அதனைத் தொடர்ந்து ஜப்பான் மற்றும் அமெரிக்காவை சேர்ந்த நிபுணர்கள் ‘ஒமிக்ரான்’ வைரஸ் தொடர்பில் ஆராய்வதற்காக எலியின் மீது சோதனை நடத்தியுள்ளனர்.

அந்த ஆய்வின் முடிவில் ஒமிக்ரான் வைரசால் ஏற்படும் இறப்பு விகிதம், எடை குறைவு மற்றும் நுரையீரல் பாதிப்பு உள்ளிட்டவை குறைவாகவே இருக்கும் என்பது தெரியவந்துள்ளது. அதேபோல் மருத்துவ நிபுணர்களும் ‘ஒமிக்ரான்’ வைரஸ் நுரையீரலின் அடிப்பகுதியை அதிகமாக தாக்காது என்பதால் உயிரிழப்பு குறைவாகவே இருக்கும் என்று தெரிவித்துள்ளனர். எனவே ‘ஒமிக்ரான்’ வைரஸ் நுரையீரலை நேரடியாக தாக்காது என்பது தற்போது உறுதியாகியுள்ளது.

Categories

Tech |