பிரிட்டனில் பள்ளிகளில் மாணவர்கள் கட்டாயமாக முகக்கவசம் அணிய வேண்டும் என்ற விதி மீண்டும் நடைமுறைப்படுத்தப்பட்டிருக்கிறது.
பிரிட்டனில் கிறிஸ்துமஸ் பண்டிகையின் போது நடத்தப்பட்ட கூட்டங்கள் மீது எந்த விதிகளும் நடைமுறைப்படுத்தப்படவில்லை. இதனையடுத்து கடந்த ஒரே நாளில் அங்கு ஒரு லட்சத்து 62 ஆயிரத்து 572 நபர்களுக்கு கொரோனா தொற்று ஏற்பட்டது. அதன் பிறகு அந்நாட்டில் கொரோனா பாதிப்பின் எண்ணிக்கை வேகமாக அதிகரித்தது.
எனவே பள்ளிகளில் மாணவர்கள் அனைத்து நேரங்களிலும், கட்டாயமாக முக கவசம் அணிய வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. பள்ளிகள் மற்றும் அனைத்து கல்லூரிகளிலும் வரும் மூன்று வாரங்களுக்கு மட்டும் இந்த விதிமுறை நடைமுறையில் இருக்கும் என்று அமைச்சர்கள் கூறியிருக்கிறார்கள்.